Monday, January 7, 2008

படம் : படகோட்டி
இசை : விஸ்வநாதன் . ராமமூர்த்தி
வரிகள் : வாலி
குரல் : T.M.சௌந்தரராஜன்

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்....

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால்
தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

(தரை மேல்..........)

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருநாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினப்பது சுலபம்...
ஊரார் நினைப்பது சுலபம்...

(தரை மேல்)

2 comments:

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

மிகவும் அருமையாக இருக்கிறது.

"கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே"

என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.

வேர்டு வெரிபிக்கேசனை நீக்கிவிடுங்கள்.
பின்னூட்டம் இடுவதற்க்கு எளிதாக இருக்கும்.

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

rahini said...

nanri manithan avarkale
ungkal varukai enakku uukkam alikkinrathu