Thursday, March 13, 2008

படம்-வசந்த மாளிகை
பாடல்: இரண்டு மனம் வேண்டும்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளைமறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் -
ஆனால்இருப்பதோ ஒரு மனம்...
நான் என்ன செய்வேன்?
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

(இரண்டு)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே!

(இரண்டு)

கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி?

(இரண்டு)

( பணம் மட்டும் )

படம்: சொல்ல மறந்த கதை
பாடியவர்கள்: இசையானி இளையராஜ
இசை: இசையானி இளையராஜா


பணம் மட்டும் வாழ்க்கையா? -
இந்தப்பாழாப்போன மனுஷனுக்கு!
பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது
கனவிலே மிதக்குது பறக்குது!
மனசு தான் தெருநாயா எங்கோ அலையுது!

( பணம் மட்டும் )
மிருகம் வந்து மனுஷமனசிலேஉள்ளே நுழைஞ்சு ஒட்டி ஆட்டுது!
உருட்டும் புரட்டும் கூடச் சேரவேகுருட்டு உலகில் குடும்பம் நடத்துது!விலைகொடுத்துப் பொருளைவாங்கிவாழ்க்கைக் பூட்டலாம்!
வாழ்க்கைக் கென்ன விலைகொடுப்பே நீயும் சொல்லு பாக்கலாம்!பாசமெல்லாம் மனுஷனுக்கு பணத்துமேல போகுதுபாழடைஞ்ச அரண்மனையா பாவி செஞ்சு மாறுது!
இழந்ததும் புரியலே வழிஎதும் தெரியலே

( பணம் மட்டும் )
மனதில் நல்ல மனிதன் நீ என்றால்மாடிவீடும் உள்ளே அழைக்குமே!மானத்தோடு இருக்க நினைப்பதால்மதித்திடாது வெளியில் துரத்துமே!
உலகம் ரொம்ப விரிஞ்சிருக்குஉனக்கு இடம் இல்லையா?
உன் இடத்தை எவன் எடுப்பான்உறுதி உனக்கு இல்லையா?
ஏர்முனையால் காயம்பட்டா எந்தநிலம் அழுகுது?
உழுவதெல்லாம் விளைச்சலுக்கு உனக்கு நல்ல படிப்பிது!
உழவுதான் நடந்தது விளைச்சல்தான் இருக்குது!
( பணம் மட்டும் )

Sunday, March 2, 2008

என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் இங்கே


என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் இங்கே


Thursday, January 24, 2008

சட்டி சுட்டதடா கை விட்டதடா


என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.
http://www.mazhalaigal.com/entertainment/audio/audio-001/mgla003_kuyil.php


படம் ஆலயமணி
பாடியவர் t.m.s

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே
நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா -
நான்இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

படம் வேட்டைக்காரன்
பாடியவர். t.m.s

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம்

மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன்
இவனென்று போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்

பூமியில் நேராக வாழும் மனிதர்கள்
சாமிக்கு நிகர் இல்லையா
தன்னைத் தானும் அறிந்துகொண்டு
ஊருக்கு சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா.

உன்னை அறிந்தால்...நீ
உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

படம் நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடியவர் P.B. Sreenivos

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...

Wednesday, January 23, 2008

அவளா சொன்னால் இருக்காது

அவளா சொன்னால் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை இல்லை இல்லை

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா?
உதட்டிலே வந்ததது உள்ளமே நினைத்ததா?

(அவளா)
உப்புக்கடல் நீரும் சக்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவைப்பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்

நீ..சொன்னது எப்படி உண்மையாகலாம்.

(அவளா)

அன்னை தந்த பால் விசமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னைக்கொள்ளளாம்
என்னை பெற்ற தாய் என்னைக்கொள்ளளாம்
உன்னை மறந்து நான் உயிரைத்தாங்கலாம்

நீ..சொன்னது எப்படி உன்மையாகலாம்
நம்ப முடியவில்லை இல்லை
(அவளா )