Thursday, January 24, 2008

சட்டி சுட்டதடா கை விட்டதடா


என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.
http://www.mazhalaigal.com/entertainment/audio/audio-001/mgla003_kuyil.php


படம் ஆலயமணி
பாடியவர் t.m.s

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே
நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா -
நான்இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

படம் வேட்டைக்காரன்
பாடியவர். t.m.s

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம்

மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன்
இவனென்று போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்

பூமியில் நேராக வாழும் மனிதர்கள்
சாமிக்கு நிகர் இல்லையா
தன்னைத் தானும் அறிந்துகொண்டு
ஊருக்கு சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா.

உன்னை அறிந்தால்...நீ
உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

படம் நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடியவர் P.B. Sreenivos

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...

Wednesday, January 23, 2008

அவளா சொன்னால் இருக்காது

அவளா சொன்னால் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை இல்லை இல்லை

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா?
உதட்டிலே வந்ததது உள்ளமே நினைத்ததா?

(அவளா)
உப்புக்கடல் நீரும் சக்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவைப்பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்

நீ..சொன்னது எப்படி உண்மையாகலாம்.

(அவளா)

அன்னை தந்த பால் விசமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னைக்கொள்ளளாம்
என்னை பெற்ற தாய் என்னைக்கொள்ளளாம்
உன்னை மறந்து நான் உயிரைத்தாங்கலாம்

நீ..சொன்னது எப்படி உன்மையாகலாம்
நம்ப முடியவில்லை இல்லை
(அவளா )

Monday, January 7, 2008

படம் : படகோட்டி
இசை : விஸ்வநாதன் . ராமமூர்த்தி
வரிகள் : வாலி
குரல் : T.M.சௌந்தரராஜன்

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்....

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால்
தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

(தரை மேல்..........)

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருநாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினப்பது சுலபம்...
ஊரார் நினைப்பது சுலபம்...

(தரை மேல்)
பாடியவர் - பி.பி.சிறீனிவாஸ்
படம் - ராமு
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதேநீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதேநீ
மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

(நிலவே என்னிடம் )
படம் : பாலும் பழமும்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்த
வரிகள் : கண்ணதாசன்
குரல் : சௌந்தரராஜன்

போனால் போகட்டும் போடா -
இந்தபூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

போனால்......)

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில்ஜனனம் என்பது வரவாகும்
வரும்மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...

(போனால்..)

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லையென்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது
இதுகோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக்கோட்டையில் நுழைந்தால்
திரும்பாது போனால் போகட்டும் போடா...

(போனால்.)

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன்நாலும் தெரிந்த தலைவனடா
தினம்நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...
(போனால்.)
படம்-சுமைதாங்கி
பாடியவர்- P B ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்-கண்ணதாசன்

மயக்கமா கலக்கமா..மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

அமதியான நதியினிலே....

தத்துவப்பாடல் வரிகள்.
-------------------------------
அமதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்.

தென்னம் இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனை சாய்ந்து விடும் புயலாக வரும் பொழுது.
(அமைதியான..)

ஆற்றங்கரை மேட்டிலே ஆடிநிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தெளிந்து
விடும் அன்பு மொழி கேட்டுவிட்டால்
துன்ப நிலை மாறி விடும்
அன்பு மொழி கரைந்து விட்டால்
துன்பம் வந்து சேர்ந்துவிடும்

(.அமதியான.)