Thursday, March 13, 2008

படம்-வசந்த மாளிகை
பாடல்: இரண்டு மனம் வேண்டும்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளைமறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் -
ஆனால்இருப்பதோ ஒரு மனம்...
நான் என்ன செய்வேன்?
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

(இரண்டு)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே!

(இரண்டு)

கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி?

(இரண்டு)

3 comments:

செம்மதி said...

வணக்கம்
றாயினி ஆக்க பூர்வமான பணியினைச் செய்யும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். உங்கள்பணி தொடரட்டும்.
----------------செம்மதி--------

rahini said...

nanri

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in